கவுதமி மீண்டும் நடிக்கிறார்
நடிகை கவுதமி மீண்டும் நடிக்க வருகிறார். 1980 மற்றும் 90களில் கவுதமி முன்னணி கதாநாயகியாக இருந்தார். தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். ரஜினியுடன் நடித்த குருசிஷ்யன், ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், கமலுடன் நடித்த அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன் படங்கள் வெற்றிகரமாக ஓடின.
கடைசியாக 2006–ல் சாசனம் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் கதை கேட்டு வருகிறார்.
இதுகுறித்து கவுதமி கூறும்போது, ‘‘மீண்டும் நடிக்க தயாராகி வருகிறேன். சில மாதங்களில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடுவேன்’’ என்றார்.
No comments: