அமிதாப்பச்சன், தர்மேந்திராவின் ஷோலே படத்தை 3டியில் மாற்ற ரூ.20 கோடி செலவு
அமிதாப்பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ்குமார் இணைந்து நடித்து 1975–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஷோலே’ நாயகிகளாக ஹேமமாலினி, ஜெயமாதுரி நடித்து இருந்தனர். அம்ஜத்கான் வில்லனாக வந்தார். ‘மகபூபா மகபூபா’, ‘ஏ தோஸ்த ஹம்’ உள்ளிட்ட பல இனிமையான பாடல்கள் இதில் உள்ளன.
இந்த படத்தை 3டியில் மாற்றி மீண்டும் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. ஏற்கனவே தமிழில் ரஜினி நடித்த ‘சிவாஜி’ படம் 3டியில் மாற்றப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. அதுபோல் ‘ஷோலே’ படத்தையும் 3டியில் உருவாக்கியுள்ளனர். கடந்த சில வருடங்களாக இதற்கான பணிகள் விறு விறுப்பாக நடந்தது. தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது. ‘ஷோலே’ படத்தை 3டியில் மாற்றுவதற்காக ரூ.20 கோடி செலவாகியுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்தார்.
இந்த படத்தை தயாரித்த போது ரூ.4 கோடிதான் செலவாகி இருந்தது என்பது குறிப்பித்தக்கது. ‘ஷோலே’ 3டி படத்தை அடுத்த மாதம் (ஜனவரி) 3–ந் தேதி இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்கின்றனர்.
No comments: