ஆஸ்திரேலியாவில் 37 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இணையதள போட்டியில் இந்திய மாணவனுக்கு முதல் பரிசு
ஆஸ்திரேலியாவில் படிப்பது மாணவர்களின் வருங்கால கனவுகளை நிறைவேற்ற எவ்வாறு உதவும் என்பதை விவரித்து போஸ்ட்கார்டு அளவில் டிஜிட்டல் வரைபடம் வரையும் இணையதள போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலிருந்தும் 190 நாடுகளைச் சேர்ந்த 37 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அக்டோபர் 1-ம் தேதி முதல் கடந்த 7 வாரமாக நடத்தப்பட்ட இப்போட்டியில், அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த உத்தம் குமார் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். டெல்லி ஐ.ஐ.டி. மாணவரான உத்தம் குமார், இந்த வெற்றியை அடுத்து ஆஸ்திரேலியாவில் ஒருவருட படிப்பை பெறுகிறார். இதில் விமான டிக்கெட், டியூசன், தங்குமிடம், உதவித்தொகை மற்றும் பயிற்சிக்கான வாய்ப்பு ஆகியவை இலவசமாக கொடுக்கப்படுகிறது.
இதையடுத்து 10 நாள் ஆஸ்திரேலிய பயணம் சென்றுள்ள உத்தம்குமாருக்கு வர்த்தக முதலீட்டுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ ரோப் முதல் பரிசை வழங்கி பாரட்டினார். பின்னர், அங்கு படிப்பது குறித்த விவரங்களை அறிய அங்குள்ள கல்வி நிறுவனங்களை அவர் சுற்றிப்பார்த்தார். அப்போது, நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மூலப்பொருள் அறிவியல் குறித்து முதுகலை பட்டம் படிக்க விரும்புவதாக உத்தம்குமார் தெரிவித்தார்.
No comments: