அதிர்ஷ்ட எண் என்பதால் ஓட்டல்களில் 9–ம் நம்பர் அறைகளில் தங்குகிறேன்: ஹன்சிகா
நடிகைகளில் ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயங்களில் நம்பிக்கை, சென்டிமென்ட் வைத்துள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட நம்பரை அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள். இன்னும் சிலருக்கு குறிப்பிட்ட நிறம் அதிர்ஷ்டமாக இருக்கிறது.
நடிகை ஹன்சிகாவுக்கு 9–ம் நம்பர் அதிர்ஷ்டமாக இருக்கிறது. வெளியூர் படப்பிடிப்புகளுக்கு சென்று ஓட்டல்களில் தங்கும்போது 9–ம் நம்பர் அறையை கேட்டு வாங்குகிறார். அந்த அறை கிடைக்காவிட்டால் கூட்டு எண் ‘9’ என வரும்படியான அறைகளில் தங்குகிறார்.
9–ம் நம்பர் அறை கிடைக்காத ஓட்டல்களில் தங்க மறுத்து வெளியேறி விடுகிறாராம். இதனால் ஹன்சிகாவுக்கு அறை பிடிப்பதில் படக்குழுவினருக்கு போதும்போதும் என்று ஆகிவிடுகிறதாம். இதுகுறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
என்னைவிட எனது அம்மாவுக்கு அதிர்ஷ்ட விஷயங்களில் நம்பிக்கை ஜாஸ்தி. என் அதிர்ஷ் எண் ‘9’ என்று அவர் உறுதியாக நம்புகிறார். நீண்ட நாட்களாகவே 9–ம் நம்பர் என்னுடன் வருகிறது. பள்ளியில் படித்தபோது என் ரோல் ‘நம்பர் 9’ எனது வீட்டு நம்பரும் ஒன்பதுதான். கார் லைசென்ஸ் நம்பரை கூட்டினாலும் ஒன்பது வரும்.
எனவேதான் ஓட்டல்களில் தங்கும்போதுதான் அறை எண் ஒன்பது என்றோ, அல்லது கூட்டு எண் ஒன்பதாக வரும்படியோ பார்த்துக் கொள்கிறேன். இது எனக்கு அதிஷ்ட எண்ணாக இருக்கிறது.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
No comments: