Header Ads

கோவா பீச்சில் ஹன்சிகாவுக்கு நடந்தது என்ன?

கோவா கடற்கரையில் உயிரே உயிரே பட ஷூட்டிங்கில் இருந்த ஹன்சிகாவை ரசிகர்கள் மொய்த்து அவரை கையை பிடித்து இழுத்துவிட்டார்களாம்.

ஹன்சிகா புதுமுகம் சித்தார்த்துடன் சேர்ந்து உயிரே உயிரே படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் கோவா சென்றனர்.

கோவாவில் உள்ள பாகா கடற்கரையில் பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.

கூட்டம் கூடியது
ஹன்சிகா, சித்தார்த் வரும் பாடல் காட்சியை மாலை 4 மணி அளவில் படமாக்கினர். இதை பார்க்க கடற்கரையில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.

ஹன்சிகா
கடற்கரையில் கூடிய ரசிகர்கள் கூட்டம் ஹன்சிகா ஹன்சிகா என்று அவரது பெயரை கூப்பிட ஆரம்பித்தனர். மேலும் தங்கள் செல்போன்களில் ஹன்சிகாவை புகைப்படம் எடுத்தனர்.

அத்துமீறல்
திடீர் என்று கூட்டம் அங்கு இருந்த பாதுகாவலர்களையும் மீறி ஹன்சிகாவின் அருகில் வந்தது. அவர்கள் ஹன்சிகாவிடம் ஆட்டோகிராப் கேட்டனர். ஆர்வக் கோளாறில் சில ரசிகர்கள் ஹன்சிகாவின் கையை பிடித்து இழுத்தனராம். பின்னர் பாதுகாவலர்கள் ஹன்சிகாவை மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அடையாளம் தெரிந்திருக்கிறது
நான் உயிரே உயிரே படப்பிடிப்பில் இருந்தபோது ரசிகர்கள் கூட்டம் கூடியது. நான் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருவதால் அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியாது என்று நினைத்தேன். ஆனால் என்னை குழந்தை நட்சத்திரமாக பார்த்த அவர்கள் அடையாளம் கண்டு என் பெயரைச் சொல்லி அழைத்தனர் என்றார் ஹன்சிகா.

இடமாற்றம்
படத்தின் தயாரிப்பாளர் ஜெயபிரதா போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தும் ரசிகர்கள் கூட்டம் அத்துமீறியது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டோம். மேலும் படப்பிடிப்பும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது என்று ஹன்சிகா தெரிவித்தார்.

Hansika was mobbed on Goa beach while shooting a song sequence for the movie Uyire Uyire

No comments:

Powered by Blogger.