வழிக்கு வந்தார் சரண்யா மோகன்
இனி எந்த நடிகையாவது தான் நடித்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மற்றும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லையென்றால் அவர்களின் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயாரை இப்படி பேச வைத்த பெருமைக்குரியவர் மலையாள நடிகையான சரண்யா மோகன். முளைத்து ஒன்றரை இலைவிட்டிருக்கும் இவர்தான் பிரச்சனைக்கு பிள்ளையார்சுழி போட்டவர்.
ஹிந்தியில் ஒரு படம் தயாரானால் அதன் புரமோஷனுக்கு குறைந்தது மூன்று வாரங்களையேனும் அதில் நடித்த முன்னணி நட்சத்திரங்கள் ஒதுக்க வேண்டும். அப்படியே தமிழுக்கு வந்தால் கடைசி நாள் படப்பிடிப்புபோடு கழன்றுவிடுகிறார்கள். முக்கியமாக நடிகைகள். பாடல்கள் வெளியீட்டு விழா நடத்துவதே படத்தை விளம்பரப்படுத்ததான். அதில் படத்தில் நடித்த நடிகையே கலந்து கொள்ளவில்லையென்றால்?. அப்படியொரு தவறைதான் சரண்யா மோகனும் கோலாகலம் பாடல்கள் வெளியீட்டு விழாவில் செய்தார்.
தயாரிப்பாளர் வருந்தி அழைத்தும் வரவில்லை அவர். நடிப்பதோடு என்னோட வேலை முடிஞ்சிடுச்சி என்பது அவரது பதிலாக இருந்தது. கேயாரின் கோபத்துக்குப் பிறகு நடிகைகளின் இந்த பிறக்கணிப்பை கடுமையாகப் பார்க்க ஆரம்பித்துள்ளது திரையுலகம். கட்டம் கட்டினால் கிடைக்கிற ஒன்றிரண்டு வாய்ப்பும் பறிபோய்விடும் என்று கோலாகலம் புரமோஷனில் கலந்து கொள்ள சம்மதித்திருக்கிறார் சரண்யா மோகன்.
No comments: