Header Ads

மணமகள் அறையில் களைகட்டிய விபச்சாரம்

திருமண மண்டபத்தில் பாலியல் தொழில் நடத்திய குற்றத்திற்காக மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நங்கநல்லூர் 48வது தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இங்கு பாலியல் தொழில் நடப்பதாக பரங்கிமலை துணை கமிஷனர் சரவணனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் பழவந்தாங்கல் பொலிசார் அந்த மண்டபத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது மண்டபத்தில் இருந்த மண்டப மேலாளர் பொலிசாரை கண்டதும் தப்பியோடினார்.
பொலிசார் அவரை மடக்கி பிடித்தனர். மேலும் மணமகள் அறையில் இருந்த ஒரு பெண், ஆணையும் பிடித்து விசாரித்தனர்.
அதில், மண்டப மேலாளர் முத்துக்குமார், கடந்த ஒரு வருடமாக மணமகள் அறையில் விபசாரத்துக்கு அனுமதி தந்தது தெரியவந்தது.இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் சோதனையில் சிக்கிய கே.கே.நகர் முகமது நூரை கைது செய்தனர். அங்கு மீட்கப்பட்ட பெண்ணை மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர்

No comments:

Powered by Blogger.