Header Ads

தம்பியின் இசையில் மயங்கிய சிம்பு

தம்பியின் இசையை கேட்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளாராம் சிம்பு.
சிம்பு தற்போது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இரவும் பகலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காரணம் இயக்குனர் பாண்டிராஜின் வேகம் அப்படி.

இதில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.

சமீபத்தில் இந்தப்படத்திற்கான முதல் பாடல் கம்போஸிங் நடந்தது. குறளரசன் இசையை லயித்துக்கேட்ட சிம்புவும், பாண்டிராஜும் ‘நீ நல்லா வருவடா’ என ட்விட்டரில் பாராட்டு மழை பொழிந்துள்ளார்கள்.

இந்தப்படத்தை சிம்புவே தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

No comments:

Powered by Blogger.