Header Ads

சூர்யா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய இயக்குனர், கேமராமேன்

படம் பப்ளிசிட்டிக்காக சூர்யாவைப் போல் இயக்குனரும் கேமராமேனும் ஹேர் ஸ்டைல் மாற்றி தாடி வளர்த்திருக்கிறார்கள். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த கதாபாத்திரத்துக்காக புது ஹேர் ஸ்டைலுக்கு தனது தோற்றத்தை மாற்றி இருக்கும் சூர்யா, தாடியும் வைத்து நடிக்கிறார். ஷூட்டிங் தொடங்கி சில நாட்கள் ஆனதும் இயக்குனர் லிங்குசாமியும் கேமராமேன் சந்தோஷ் சிவனும் தங்கள் ஹேர் ஸ்டைலையும் அவரைப் போலவே மாற்றிக்கொண்டிருக்கின்றனர். இதுபற்றி லிங்குசாமி கூறும்போது, படத்தில் சூர்யா புதிய தோற்றத்துக்கு தனது ஹேர் ஸ்டைலை மாற்றி இருக்கிறார். 

அவரது தோற்றம்போலவே நானும், கேமராமேன் சந்தோஷ் சிவனும் எங்கள் ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டிருக்கிறோம். அவரைப்போலவே தாடியும் வைத்துள்ளோம். இதனால் நீங்களும் நடிக்கிறீர்களா என்கிறார்கள். அப்படி எந்த எண்ணமும் இல்லை. ஒரு ஜாலிக்காகவே இப்படி ஹேர் ஸ்டைலை மாற்றி இருக்கிறேன். 

சமீபத்தில் சூர்யா நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது என்றார். படம் ரிலீசாகும்வரை 3 பேரும் வெளியிடங்களுக்கு இந்த கெட்அப்பிலே வருவார்கள். இதுவும் ஒருவகை பட புரமோஷன் பாணிதான் என்கிறது கோலிவுட் வட்டாரம்

No comments:

Powered by Blogger.