ஹீரோயினா நீடிக்க பொறுமை அவசியம் : ஐஸ்வர்யா
ஆப்பிள் பெண்ணே படத்தில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா மேனன். அவர் கூறியதாவது: இன்ஜினியரிங் முடித்துவிட்டு சாப்ட்வேர் கம்பெனியில் அதிக சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அதற்கு பெற்றோர் அனுமதி தரவில்லை. ஒரு கட்டத்தில் எனது எண்ணத்தை புரிந்துகொண்டு நடிக்க சம்மதித்தனர். கிளாமராக நடிப்பீர்களா? என்கிறார்கள். ஆபாச இல்லாமல் கிளாமராக நடிப்பதில் ஆட்சேபனை இல்லை. நானே நேரடியாக எனது கால்ஷீட்டை பார்த்துக்கொள்கிறேன். கோலிவுட்டில் ஹீரோயினாக நீடிக்க வேண்டுமென்றால் பொறுமை அவசியம், கிளாமர் காட்ட வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறேன்.
No comments: