தோசை சுடுவதில் நான் ஸ்பெஷலிஸ்டு: தமன்னா
எட்டு ஆண்டுகளில் முப்பது படங்களில் நடித்து விட்டார் தமன்னா. இது சாதனையாக கருதப்படுகிறது. தமன்னாவுடன் வந்த பல நடிகைகள் மார்க்கெட் இழந்து ஓரம் கட்டப்பட்டு விட்டனர். ஆனால் இவர் மட்டும் தமிழ், தெலுங்கில் இன்னும் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.
அஜீத்துடன் நடித்த ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வருகிறது. மேலும் இரண்டு இந்தி படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். குடும்பத்தினருடன் வெளியூருக்கு சுற்றுலா செல்ல படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வு எடுத்துள்ளார். குடும்பம்தான் தனக்கு முக்கியம் என்றார் அவர்.
இது குறித்து தமன்னா அளித்த பேட்டி வருமாறு:–
சினிமாவா? குடும்பமா? என்றால் குடும்பத்திற்குதான் முதல் இடம் தருவேன். குடும்பம் எனக்கு ரொம்ப முக்கியம். என் பலம் பலவீனம் இரண்டுமே குடும்பம்தான். படப்பிடிப்புக்கு எனது அப்பா அல்லது அம்மா யாராவது கூட வந்தே ஆக வேண்டும். வீட்டில் இருந்தால் நான் ஒரு நடிகை என்பதையே மறந்து விடுவேன்.
எனக்கு தோசை சுட நன்றாக தெரியும். வட்டமாக சிறு கோணல்கூட இல்லாமல் அற்புதமாக தோசை சுடுவேன். நான் சுடும் தோசையை பார்த்தால் எல்லோருக்கும் சாப்பிட ஆர்வம் தோன்றும். தோசை சுடுவதில் நான் ‘ஸ்பெஷலிஸ்டு சாப்பிடுவதிலும்தான்.
இவ்வாறு தமன்னா கூறினார்.
No comments: