Header Ads

ரஜினியின் புதிய படத்தை நான் இயக்கவில்லை: டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்

ரஜினியின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை என்று டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மறுத்துள்ளார். ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. இதையடுத்து ரஜினி அடுத்து நடிக்கப்போகும் படம் பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன.

ரஜினியின் அடுத்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அல்லது கே.வி.ஆனந்த் இயக்குவார் என செய்திகள் பரவி உள்ளன. ரஜினியை வைத்து ஏற்கனவே பல படங்களை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். 

கடைசியாக ‘ராணா’ படத்தை இயக்க முனைந்தபோது ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ‘ராணா’ படம் கைவிடப்பட்டது. எனவே மீண்டும் கே.எஸ்.ரவிக்குமாருக்கே வாய்ப்பு கொடுத்து தனது படத்தை ரஜினி இயக்க வைப்பார் என கூறப்பட்டது. இதனை கே.எஸ்.ரவிகுமார் மறுத்தார். 

அவர் கூறியதாவது:– 

ரஜினியின் அடுத்த படத்தை நான் டைரக்டு செய்யப்போவதாக தொடர்ந்து வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு பலமுறை பதில் சொல்லி விட்டேன். ரஜினியின் அடுத்த படத்தை நான் டைரக்டு செய்யவில்லை. சுதீப் படத்தை இயக்கப் போகிறேன். இந்த படம் சம்பந்தமான விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Powered by Blogger.