அமெரிக்க சிறையில் போதை குற்றவாளிகளுடன் இந்திய பெண்தூதர் அடைப்பு
போதை குற்றவாளிகளுடன் இந்திய பெண் தூதர் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை அதிகாரியாக தேவயானி கோபர்கடே (39) பணிபுரிகிறார். போலியான தகவல்கள் மூலம் விசா மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
நியூயார்க் பள்ளியில் தனது மகள்களை விட்டு திரும்பும் போது நடு வீதியில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.
அது தூதரக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அரசும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அதன்பின்னர் ரூ.1 கோடியே 50 லட்சம் ஜாமீனில் அவர் விடப்பட்டார்.
அதிகாரி தேவயானி கோபர்கடேயிடம் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அவர், நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
துணை தூதர் அந்தஸ்தில் இருக்கும் இவர் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையான குற்றவாளிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு டெல்லி வந்துள்ளது. நேற்று அவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர்மேனன் ஆகியோரை சந்திப்பதாக இருந்தது.
ஆனால், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர்களுடன் ஆன சந்திப்பை இருவரும் ரத்து செய்தனர்.
No comments: