Header Ads

ரத்தக்கறை படிந்த வீட்டில் தம்பதி மாயம் கணவனை அடித்து கொன்று விட்டு கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்?

சென்னை : ரத்தக்கறை படிந்த வீட்டில் தம்பதி மாயமான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே அடித்து கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரங்கன் (42). இவர், அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி லட்சுமி (33). நேற்று முன்தினம் அதிகாலை முதல் தம்பதியினரை காணவில்லை. ஆனால், வீடு முழுவதும் ரத்தக்கறை இருந்தது. அறை முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. மேலும் வீட்டிலிருந்த பைக் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி இருந்தன.இதுகுறித்து ரங்கனின் தம்பி ராஜேந்திரன் கூடுவாஞ்சேரி போலீசிலும், எஸ்.பி.யிடமும் புகார் செய்தார். அதன்படி, எஸ்.பி. விஜயகுமார் 3 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து மாயமான தம்பதி ரங்கன், லட்சுமியை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். புகாரில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கார் திருட்டு வழக்கில் சிறை சென்று வெளியே வந்த திருப்போரூர் அடுத்த மேலையூர் பகுதியை சேர்ந்த சந்திரனின் மகன் சதீஷ் என்பவர் மீது சந்தேகம் உள்ளது என்றும், லட்சுமிக்கும், சதீசுக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்தது. 

இதனால் கள்ளக்காதலன் சதீசும், லட்சுமியும் சேர்ந்து ரங்கனை கொலை செய்து சடலத்தை கோணிப்பையில் கட்டி காரில் தூக்கி சென்று காட்டில் வீசி இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.எனவே, போலீசார் நேற்று காலை சதீஷின் பெண் உறவினர் உள்பட 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், சதீஷ் உறவினர்கள் கூறிய தகவலை வைத்து பெருமாட்டுநல்லூர் உள்ள வனக்காட்டுப் பகுதியில் ரங்கனின் சடலத்தை 2வது நாளாக போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்காதலன் சதீஷ் அடியாட்களை அழைத்து வந்து லட்சுமியுடன் சேர்ந்து வீட்டில் இருந்த ரங் கனை உருட்டுக்கட்டை யால் சரமாரியாக தாக்கி பின்னர் காரில் கடத்தி சென்று கொலை செய்து காட்டில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கள்ளக்காதலன் சதீசையும், லட்சுமியையும் போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.