ஒரே படத்தில் தனுஷ், சிம்பு!
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களில் தனுஷ் நடித்தார். அப்போது தொடங்கிய இவர்கள் நட்பு ஆழமானதாக இருக்கிறது.
வெற்றிமாறன் தன் மூன்றாவது படத்தையும் தனுஷை ஹீரோவாக வைத்துதான் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில்வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ், வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் படம் ‘காக்கா முட்டை’ .
நாளைய இயக்குனரில் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான மணிகண்டன் இப்படத்தை இயக்குகிறார்.சிறுவர்களை மையமாகக் கொண்ட படம் இது.
இப்படத்தில் சிம்புவும், தனுஷும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள் . படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும் தனுஷ் - சிம்புவின் கேரக்டர் முக்கியமானதாக இருப்பதால், அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம்.
'காக்கா முட்டை' அநேகமாக ஜூன் 2014ல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: