நண்பரின் காமப் பசிக்கு பெற்ற பிள்ளைகளை இரையாக்கிய கொடூர தாய்....
அமெரிக்காவில் பெற்ற தாயே தன்னுடைய குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓகியோ நகரை சேர்ந்த பெண் பாபி சூயு பேக், இவரது தாயார் எட்வினா லூயிஸ். பாபிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பாபியும், லூயிசும், ஜூயன் கரோலஸ் சான்செஸ் என்பவருடன் கூட்டு சேர்ந்து அக்குழந்தைகளை கட்டிப்போட்டு, செயினால் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
சான்செஸ், பாபியின் 11 மற்றும் 9 வயதான பெண்குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளான். மேலும் அவர்களை கட்டிலில் கட்டிப்போட்டு விட்டு, தொடர்ச்சியாக செயின் மற்றும் கரண்டியால் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதில் குழந்தைகளின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்லைனில் போதனை வகுப்புகள் நடந்துள்ளது, இதன் மூலம் அமெரிக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
வாழ்க்கையிலேயே முதல் முறையாக இந்த மாதிரியான குற்றத்தை பார்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டேவிட் ஹால் என்ற பொலிஸ் அதிகாரி கூறுகையில், இச்சம்பவம் மிக கொடுமையான நிகழ்வாகும். அவர்கள் குழந்தைகளை பல வாரங்களுக்கு நிர்வாணமாக கட்டிலில் கட்டி வைத்துள்ளனர், மேலும் எப்போதாவதுதான் உணவு வழங்கியுள்ளனர்.
அவர்களுடைய இணைய வகுப்பின்போது மட்டுமே சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. ஆனால் அக்குழந்தைகள் மிக மிக தைரியசாலிகள், கடவுள்தான் அவர்களுக்கு அந்த தைரியத்தை அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சான்செஸ், பாபி மற்றும் எட்வினா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை வருகிற 20ம் திகதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நண்பரின் காமப் பசிக்கு பெற்ற பிள்ளைகளை இரையாக்கிய கொடூர தாய்....
Reviewed by hits
on
February 14, 2014
Rating: 5
Reviewed by hits
on
February 14, 2014
Rating: 5

No comments: