Header Ads

உடல் எடையை குறைத்த ஜீ.வி.பிரகாஷ்


இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷ் ‘மதயானைக்கூட்டம்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ‘பென்சில்’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தில் நடித்தபோது ஜீ.வி.பிரகாஷ் தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். மேலும், இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார். படத்தில் பள்ளி மாணவன் தோற்றத்தில் தெரிவதற்காக இந்த எடை குறைப்பு செய்துள்ளாராம். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறாராம். 

No comments:

Powered by Blogger.