நண்பர்களுடன் களியாட்டங்களில் ஈடுபட ரொம்ப ஆசையா இருக்கு... ஆனா முடியல... ஹிருணிகா
நான் 26 வயது யுவதி என்பதால் எனது வயதுக்கு ஏற்ற வகையில் களியாட்டங்களில் ஈடுபட ஆசை இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.அவிசாவளையில் இடம் பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நான் இன்னும் 26 வயது யுவதி என்பதால் எனக்கும் நண்பர்களுடன் வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருக்க களியாட்டங்களில் ஈடுபட ஆசை.ஆனால் அவை அனைத்தையும் விட்டு விட்டு அரசியலை தேர்ந்தெடுத்தேன்.எனது தந்தை அரசியலில் அவரால் செய்ய முடியாது போன மற்றும் செய்யத் தவறிய பணிகளை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: