Header Ads

காதலிப்பது உண்மைதான் பாவனா ஒப்புதல்

நடிகை பாவனா திடீரென்று காதலில் விழுந்திருக்கிறார். திரையுலகை சேர்ந்த ஒருவரை காதலிக்க தொடங்கி உள்ளார். ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துவந்த பாவனா கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் முடங்கினார். கன்னடம், மலையாள படங்கள் அவருக்கு கைகொடுத்தன. இருமொழிகளில் மாறி மாறி நடித்து வந்தவருக்கு கோலிவுட்டில் வாய்ப்பை மட்டும் தக்க வைக்க முடியவில்லை. இதற்கிடையில் பாவனா திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

இதுபற்றி கருத்து தெரிவித்த பாவனா, தனது திருமணம்பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை, யாரையும் காதலிக்கவும் இல்லைஎன்றார். காதல் இல்லை என்று மறுத்துவந்த பாவனா தற்போது மனம் திறந்திருக்கிறார். மனம் கவர்ந்த ஒரு நபர் தன் வாழ்வில் இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதுடன் அவர் திரையுலகை சேர்ந்தவர் என்றும் க்ளூ கொடுத்திருக்கிறார். 

இதுபற்றி மேலும் கூறும்போது,என் மனம் கவர்ந்தவர் திரையுலகை சேர்ந்தவர்தான். 2 வருடத்துக்கு முன்பு நாங்கள் நண்பர்கள் ஆனோம். என் கடந்தகால வாழ்க்கைபற்றி அவர் முழுமையாக அறிந்தவர் என குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கின்றனர். குருவாயூர் கோயிலில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மல்லுவுட்டில் பேசப்படுகிறது. -

No comments:

Powered by Blogger.