Header Ads

அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்: வயிறு வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு....video

சீனத் தலைநகரான பீஜிங்கில் மது அருந்திய பின்பு, அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

58 வயதான அப்பெண் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதில் அவரின் கீழ்வயிற்றில் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்து வாயு வெளியாகி தீ பிழம்பு தோன்றியதாக கூறப்படுகிறது.

அவரது வயிற்றில் உள்ள குடல் முழுவதையும் அகற்ற முடிவு செய்துள்ளதாக நான்ஜிங் டிரம் டவர் மருத்துவமனையை சேர்ந்த வாங் ஹாவ் என்ற மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அவரது வயிற்றில் இருந்த எத்தில் ஆல்கஹாலுக்கும், அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட மின் அறுவை கத்திக்கும் ஏற்பட்ட தொடர்பினால் இச்சம்பவம் நடந்ததாக ஹாவ் கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.