Header Ads

கோவையில் வாலிபர் பிணம் மீட்பு: பனியன் நிறுவன அதிபரை மனைவியுடன் பிடிக்க கேரளாவில் தனிப்படை போலீஸ் முகாம்

திருப்பூர் வீ.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40). இவர் மருதாசலபுரத்தில் பனியன் லேசர் கட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய பனியன் கம்பெனியில் திருப்பூர் பிச்சம்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்த பத்மநாபன் (வயது 35) என்பவர் மேலாளராக வேலை செய்து வந்தார்.

பத்மநாபன் திருப்பூர் போயம்பாளையத்தில் சொந்தமாக பனியன் நிறுவனம் தொடங்கினார். இதனால் பத்மநாபனுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 23–ந் தேதி பனியன் கம்பெனியிலிருந்த பத்மநாபனை செந்தில்குமார், அவருடைய மனைவி விசாலாட்சி, கோவை பேரூர் வெள்ளருகம்பாளையத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி குமாரசாமி (40) ஆகியோர் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.

பத்மநாபனின் உடலை காரில் ஏற்றி கோவை பேரூர் அருகேயுள்ள தென்னம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையில் புதைத்தனர்.இதற்கு வெள்ளருகம்பாளையத்தை சேர்ந்த விவசாய கூலிதொழிலாளர்கள் கிட்டுசாமி(24), சின்னத்துரை(25) ஆகியோர் உதவி செய்தளர்.

இந்நிலையில் பத்மநாபனின் உறவினர்கள் அவரை காணவில்லை என திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பத்மநாபன் செந்தில்குமாரால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய குமாரசாமி, கிட்டுசாமி, சின்னத்துரை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதைக்கப்பட்ட பத்மநாபனின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் கேரளாவில் பதுங்கி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் செந்தில்குமார், பத்மநாபன் ஆகியோரின் புகைப்படங்களை அங்குள்ள போலீஸ் நிலையங்களில் காண்பித்து அவர்களை பிடிக்க தேவையான நவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.