Header Ads

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி–மாமனார் படுகொலை: வாலிபர் வெறிச்செயல்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டுக்காடு கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்.

இவரது மகள் ராதா(28). இவருக்கும், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவாநத்தம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(35). என்பவருக்கும் திருமணம் ஆகி அவர்களுக்கு மதுராஸ்ரீ (10) ரித்திக்ரோசன்(8), ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

பாலசுப்பிரமணியன் கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூர் சென்று அங்கு வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் அவர் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் வேதனை அடைந்த ராதா தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார். இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு பாலசுப்பிரமணியம் வந்தார். அவர் மனைவியுடன் தகராறு செய்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

அதனை தடுக்க முயன்ற மாமனார் முத்துகிருஷ்ணனையும் கத்தியால் குத்தி பாலசுப்பிரமணியம் கொலை செய்தார்.

இந்த சம்பவத்தின் ராதாவின் அண்ணன் ரமேஷின் மனைவி ராஜேஷ்வரி, மாமியார் வளர்மதி ஆகியோரும் கொலையை தடுக்க முயன்றுள்ளனர். அவர்களை பாலசுப்பிரமணியம் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதால் அவர்கள் அறைக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் பாலசுப்பிரமணியன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அவர் மோட்டார் சைக்கிளில் வந்து இந்த இரட்டை கொலை செய்து விட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொலை நடந்த போது பாலசுப்பிரமணியத்தின் குழந்தைகளும் அங்குதான் தூங்கி கொண்டிருந்தனர்.

இந்த இரட்டைகொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் மகாதேவன் வழக்குப்பதிவு செய்து கொலையுண்ட 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் தலைமறைவான பாலசுப்ரமணியனை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் சிக்கினால் தான் ராதாவிடம் பழகி வந்தது யார்? என்பது தெரியவரும்.

இந்த சம்பவம் ஒரத்தநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Powered by Blogger.