Header Ads

விமான பயணத்தில் மொபைல், லேப்டாப்களை இனி சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை..

பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்-டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை ப்ளைட் மோடில் போடுமாறு உங்களுக்கு கூறுவார்கள். 

இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை. எனவே விமான பயணத்தின் போது இனி பயணிகள் தங்கள் மொபைல், லேப்டாப்களை ப்ளைட் மோடில் போட்டால் மட்டும் போதும். இதன் மூலம் பயணிகள் விமான பயணத்தின் போது ஈ மெயில் டைப் செய்து கொள்ள முடியும். பின்னர் தரையிறங்கிய உடன் அதை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி கொள்ளலாம். 

அதே போல் கேம்ஸ் விளையாடவும், மியூசிக் கேட்கவும், சேமித்து வைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் வசதி ஏற்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் இந்த அறிவிப்பு விமான பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது 

No comments:

Powered by Blogger.