Header Ads

தாயின் கள்ளக்காதலன் கற்பழித்ததால் 14 வயது சிறுமி கற்பமாகியுள்ள அதிர்ச்சி சம்பவம்.

நடுத்தர வயது பெண் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்தார். தனக்கும், தன் முந்நாள் கணவருக்கும் பிறந்த 14 வயது மகளையும் வளர்த்து வந்தார்.இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று இச்சிறுமியின் தாய் வெளியில் சென்றிருந்த நேரத்தில் குடிபோதையில் வீடு புகுந்த அவளின் கள்ளக்காதலன் நிலை தடுமாறி தனிமையிலிருந்த 14 வயது சிறுமியை கற்பளித்துள்ளான்.

தற்போது 9 வார கருவை வயிற்றில் சுமந்திருக்கும் தன் மகளுக்கு கருக்கலைப்பு செய்வதற்காக அச்சிறுமியின் தாயார் மருத்துவமனையை நாடியுள்ளார்.Tamil-Daily-News_5971491337



ஆனால் சால்டோ நகரில் கருக்கலைப்பு செய்வது குற்றமாகும், எனவே இதனை மறுத்த மருத்துவர் நீதிமன்றம் அனுமதியளித்தால் தாங்கள் கருக்கலைப்பு செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த வருடம் கருக்கலைப்பு செய்வது குற்றமான செயல் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

மேலும் அர்ஜெண்டினாவில் இதுபோன்ற வழக்குகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றாலும் ஒரு சில சூழ்நிலைகளில் கருக்கலைப்பிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்குவது குறிப்பிடத்தக்கது.





***நோயாளியின் கல்லீரலில் இனிஷியலை பதிவு செய்த மருத்துவரால் பரபரப்பு.

இங்கிலாந்தில் நோயாளியின் கல்லீரலில் தனது இனிஷியலை பதிவு செய்து வைத்த பிரபல மருத்துவரால் சர்ச்சை எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக சிமோன் பிரம்ஹால் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யும் போது, நோயாளியின் கல்லீரலில் தனது இனிஷியலை பதிவு செய்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இவரது சக மருத்துவர்கள் கூறுகையில், சிமோன் பிரம்ஹால் மிகவும் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் ஆவார்.

ஏராளமான நோயாளிகளுக்கு வெற்றிகரமாக உள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து பிரபலமானவர்.

சில தினங்களுக்கு முன்பு இவர் அறுவை சிகிச்சை செய்த நோயாளி ஒருவரை, பிற மருத்துவர்கள் வழக்கமான செக்- அப் செய்தனர்.

அப்போது அந்த நோயாளியின் கல்லீரலை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் ‘எஸ்.பி’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

விசாரணை நடத்தியதில் இயந்திரங்களை ஒட்ட வைக்கும் ஆர்கன் என்ற வாயுவை கொண்டு இவர் மிகவும் நூதன முறையில் அந்த நோயாளியின் கல்லீரலில் தனது இனிஷியலை பதிவு செய்துள்ளது தெரியவந்தது.

தற்போது துறைரீதியாக விசாரணை நடத்தி சிமோன் பிரம்ஹாலை மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் இங்கிலாந்து பத்திரிக்கைகளில் வெளியாகி உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Powered by Blogger.