10ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த கருணாநிதி
அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்ய முயன்ற 50வயது முதியவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மகள் மலர்( 15) இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை வினோத் இறந்து போனதால் தாயின் பராமரிப்பில் மாணவி மலர் இருந்து வந்தார். பிழைப்புக்கு வழியின்றி வறுமையில் வாடிய இவர்களது நிலையை அறிந்த வெட்டிக்குப்பை பகுதிதியை சேர்ந்த விவசாயி கருணாநிதி (50) என்பவர் பண உதவி செய்து வந்தார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மாணவி மலரை வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற கருணாநிதி திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது.
இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் சந்திரமோகன் உடையார்பாளையம் பொலிசார் புகார் செய்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய பொலிசார் எடுத்த விரைவான நடவடிக் கையால் கருணாநிதியை கைது செய்தனர். அவர் கடத்தி சென்று திருமணம் செய்த மாணவி மலரும் மீட்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கருணாநிதியிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளதும், அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் வறுமையில் வாடிய மலரின் குடும்பத்துக்கு பண உதவி செய்து வந்த நிலையில் மாணவி மீது அவருக்கு இருந்த ஆசையால் தாயின் அனுமதியுடன் மலரை கடத்தி சென்று திருமணம் செய்ததும் அம்பலமானது.
மீட்கப்பட்ட மாணவி மலர் திருச்சியில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments: