ஈராக்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் குண்டு வெடித்தது: 22 பேர் பலி
ஈராக்கில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இருவேறு இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 22 பேர் வரை கொல்லப்பட்டனர். பாக்தாத் நகரை ஒட்டியுள்ள கிராமம் ஒன்றில் குறைந்த அளவு கிறிஸ்துவர்களே வசித்து வந்த சூழ்நிலையில் அங்குள்ள தேவாலயத்தின் அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 15 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் சில கிறிஸ்துவர்கள் வசிக்கும் அத்தோரியன் பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் 16 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கில் வசிக்கும் 4 லட்சம் முதல் 6 லட்சம் கிறிஸ்தவ மக்கள், அல்கொய்தா மற்றும் அங்குள்ள கிளர்ச்சியாளர்களால் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈராக்கிலுள்ள மேற்கு பாலைவன பகுதியில் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் மீது பலமான ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்ற

No comments: