Header Ads

சீக்கியர்களுக்கு தடை விதித்தது ஏன்? அமெரிக்காவுக்கு நோட்டீஸ்

அமெரிக்க இராணுவத்தில் சீக்கியர்கள் சேருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீக்கியர்கள் முதல் உலகப் போரில் இருந்து அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றுகின்றனர்.

இவர்கள் நீண்ட முடி வளர்ப்பது, டர்பன் அணிவது உள்ளிட்ட சில அம்சங்களை கைவிட்டால் தான் இராணுவத்தில் சேர முடியும் என 1980ம் ஆண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதனால் சீக்கியர்கள் இராணுவத்தில் சேர்வதை தவிர்த்தனர், இந்நிலையில் தடை விதித்தது ஏன் என்பதற்கு விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மார்ட்டின் ஆர் காஸ்ட்ரோ அமெரிக்க இராணுவ அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தற்போதைய கட்டுப்பாடுகளின்படி சீக்கியர்கள் தங்களது சமயக் கொள்கைகளுக்கு சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே இராணுவத்தில் சேர முடியும் என்ற நிலை உள்ளது.

இத்தகைய கட்டுப்பாடுகளின் மூலம், இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை புரிவதை நிறுத்த கூடாது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் மற்றும் தங்கள் மதச் சின்னங்களை துறந்தால் மட்டுமே இராணுவத்தில் சேர முடியும் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது அமெரிக்க இராணுவத்தில் இரு சீக்கியர்கள் பணிபுரிகின்றனர், அவர்கள் இருவரின் சிறந்த பணிக்காக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.