கோடம்பாக்கத்தை அட்டாக் பண்ணும் ரம்யா நம்பீசன்
எனது நடிப்பால் ரசிகர்களை அட்டாக் பண்ணுவேன் என்று கூறியுள்ளார் ரம்யா நம்பீசன்.
ஒருநாள் ஒரு கனவு படத்தில் என்ட்ரியான இவர் அதையடுத்து ராமன் தேடிய சீதை, இளைஞன், ஆட்ட நாயகன், குள்ள நரிக்கூட்டம் என பல படங்களில் நடித்தார்.
ஆனபோதும் ரம்யாவின் மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை. அதையடுத்து விஜயசேதுபதியுடன் நடித்த பீட்சா படத்தின் வெற்றி ரம்யா மீது வெளிச்சம் பாய்ச்சியது.
இருப்பினும் பெரிய ஹீரோக்களின் படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை.
தற்போது விமலுடன் ரெண்டாவது படம் என்ற படத்தில் நடிக்க கமிட்டான ரம்யாவுக்கு அடுத்தடுத்து நான்கு பொலிசும் நல்லாயிருந்த ஊரும், டமால் டுமீல் என சில படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பீட்சாவில் த்ரில்லிங்கான கதையில் நடித்த நான் இப்படத்தில் வித்தியாசமான கொமடி கதையில் நடித்திருக்கிறேன்.
இப்படமும் ஹிட்டானால் கொமடி படமெடுக்கும் இயக்குனர்கள் என் பக்கம் திரும்புவார்கள், அதேபோல் விமலுடன் ரொமான்ஸ் காட்சியிலும் புகுந்து விளையாடியிருக்கிறேன் என்றும் இப்படத்தில் எனது நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் அட்டாக் பண்ணும் என அடித்து சொல்கிறார் ரம்யா நம்பீசன்.

No comments: