Header Ads

கும்பலால் அரசு பெண் ஊழியர் கற்பழிப்பு: காரைக்கால் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்டு

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள அரசு அலுவலக பெண்ஊழியர் லட்சுமி பிரியா (வயது 21) (பெயர் மாற்றம்). இவர் தனது தோழி வெண்ணிலாவுடன் (பெயர் மாற்றம்) சேர்ந்து தோழியின் காதலனை நேரில் சந்திக்க காரைக்கால் சென்றார்.

அங்கு லட்சுமிபிரியாவை மிரட்டி 2 பேர் கடத்தி சென்றனர். அங்குள்ள ஒரு கட்டிடத்தில் தனி அறையில் அந்த பெண்ணை அடைத்து வைத்தனர். பிறகு ஒரு கும்பல் மாறி, மாறி லட்சுமிபிரியாவை கற்பழித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

கும்பலால் கற்பழிக்கப்பட்ட லட்சுமிபிரியா மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கற்பழிப்பு சம்பவத்தால் காரைக்காலில் பரபரப்பு ஏற்பட்டது. அன்று பணியில் இருந்த காரைக்கால் நகர போலீசார் அஜாக்கிரதையாக இருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளானார்கள். அதன்பேரில் காரைக்கால் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, ஏட்டு சபாபதி ஆகியோரை புதுவை போலீஸ் டி.ஜி.பி.காமராஜ் 'சஸ்பெண்டு' செய்தார்.

No comments:

Powered by Blogger.