Header Ads

அதர்வாவின் ‘ஈட்டி’

இரும்புக்குதிரை படத்தில் நடித்துவரும் அதர்வா அடுத்ததாக 'ஈட்டி' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இயக்குனர் வெற்றிமாறனும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஈட்டி’ இந்தப்படத்தை வெற்றிமாறனின் சுமார் 10 வருட காலம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரவி அரசு என்பவர் இயக்குகிறார்.

இந்தப்படத்தில் அதர்வா தடகள விளையாட்டு வீரராக வருகிறார். இவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.

படத்துக்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ் அதற்குள்ளாகவே மூன்று பாடல்களை போட்டுக் கொடுத்திருக்கிறாராம்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், இரண்டு வருடத்துக்கு முன்னாடி அதர்வாவை மனசுல வச்சு உருவாக்கின கதைதான் ஈட்டி. இந்தப் படத்தோட கதையும், களமும் தமிழ் சினிமாவுக்கு புதுசா இருக்கும்.

இன்னைக்கு இந்தியா பல துறைகள்ல முன்னேறியிருக்கு. ஆனால் விளையாட்டைப் பொறுத்தவரை இன்னும் பின்தங்கிதான் இருக்கு என்றும் அந்த வகையில் விளையாட்டை ஊக்குவிக்கிற மாதிரியான ஒரு சப்ஜெக்ட்டை கையில் எடுத்திருக்கோம் எனவும் கூறியுள்ளார்.

குறிப்பாக தமிழ்நாட்டு விளையாட்டு துறை கவனிக்கிற மாதிரியான ஒரு படமாக ’ஈட்டி’ அமையும் என்கிறார் ரவி அரசு நம்பிக்கையுடன்.

ஜனவரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

No comments:

Powered by Blogger.