Header Ads

டெல்லியை உலுக்கிய பலாத்கார சம்பவம்!

கடந்த வருடம் இதேநாளில் தான் ஓடும் பேருந்தில் நண்பரோடு பயணம் மேற்கொண்ட மருத்துவ மாணவி 6 காமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியாவின் தலைநகரில் நடந்த இந்தக் கோடூரச சம்பவத்தால் உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவில் பாதுகாப்புக் குறித்து கேள்விக்குறி உண்டானது.

சரியாக இன்றோடு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

நிர்பயா கற்பழிப்பு

டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த 23 வயது மருத்துவ மாணவி தன் நண்பருடன் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு திரையரங்குக்கு சினிமா பார்க்க சென்றுள்ளார்.

இரவு 9.30 மணிக்கு வெளியில் வந்த அவர்களுக்கு வீடு திரும்ப ஆட்டோ கிடைக்கவில்லை. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் அவர்கள் ஏறியுள்ளார்கள்.



பேருந்தில் ஓட்டுனர் ராம்சிங்கும் அவனது கூட்டாளிகள் 5 பேர் மாணவியை கிண்டல் செய்துள்ளனர். இதனை மாணவியின் நண்பர் தட்டி கேட்டதால் அவர்களுக்குள் கை-கலப்பு, மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த பழைய இரும்பு கம்பிகளை எடுத்து நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் அடிப்பட்ட அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து மாணவி அவர்களை கடுமையாக திட்டியுள்ளார். பேருந்தை நிறுத்தும்படி கூச்சலிட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள், மாணவியை இரும்பு கம்பியால் தாக்கினார்கள். ஒருவன் மாணவி வயிற்றில் கம்பியால் குத்தியுள்ளான்.

இதில் சுருண்டு விழுந்த மாணவியை போதையில் இருந்த வாலிபர்கள் ஈவு இரக்கமின்றி கற்பழித்தனர். சுமார் 30 நிமிடம் அந்த பேருந்து டெல்லி சாலையில் ஓடிய நிலையில், மாணவி சின்னா பின்னமாக்கப்பட்டார்.

காம இச்சையை தீர்த்துக் கொண்ட 6 பேரும் 10.35 மணியளவில் ஓடும் பேருந்தில் இருந்து மாணவியையும், அவரது நண்பரையும் சாலையோரத்தில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.

கருகிய மலர்

சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பொலிசில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பொலிசார் மாணவியையும், அவரது நண்பரையும் மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சையளித்தும் மாணவியின் உள்உறுப்புகள் ஒவ்வொன்றும் செயல் இழந்து டிசம்பர் 29ம் திகதி அதிகாலை 2.15 மணிக்கு மரணம் அடைந்தார்.

போராட்டக்களமான இந்தியா

மாணவி கற்பழித்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடெங்கும் மகளிர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. டெல்லியில் போராட்டம் தீவிரம் அடைந்தது.





குற்றவாளிகளை உடனே தூக்கில் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி இந்தியா கேட் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், மாணவ-மாணவிகள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.



மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இது இந்தியாவில் இதுவரை மக்களிடம் ஏற்படாத எழுச்சியாக கருதப்பட்டது.

இதனால் உலகின் பல நாடுகளிலும் இது பற்றிய செய்திகள் முதன்மை இடம் பெற்றன.

குற்றவாளிகளுக்கு தூக்கு

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கற்பழிப்பு குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்குவதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, பின்னர் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, இதுபோன்ற அரிதான குற்றங்களுக்கு, அதிக பட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டு இருந்தது.



இந்த வழக்கின் தீர்ப்பை நாட்டு மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் செப்படம் 13ம் திகதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்களில் ஒருவன் 18 வயதுக்கு உட்பட்டவன் என்பதால்இளங்குற்றவாளிகள் சட்டப்பிரிவின்படி, அதிக பட்ச தண்டனையான 3 ஆண்டு சிறை தண்டனை அவனுக்கு விதிக்கப்பட்டது.

மற்ற 5 குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங் என்பவன், கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி அன்று டெல்லி திகார் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டான்.

மகள் நினைவில் வாடும் பெற்றோர்

ஓராண்டு நிறைவு பெற்று விட்ட நிலையிலும் மகளது நினைவிலேயே வாழ்வதாக மாணவியின் பெற்றோர் கண்ணீரோடு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் ஒருபோதும் அந்த துயரச் சம்பவ நினைவிலிருந்து மீள முடியாது. அவள் எங்களுடன் இன்னும் வாழ்வதாக கருதுகிறோம்.

எங்கள் கண்ணீர் இன்னும் காய்ந்து விடவில்லை. ஒவ்வொரு நாளும் அவளுடைய நினைவுகளுடனே கழிகிறது என்றும் வீட்டில் யாராவது ஒருவர் எப்போதும் அழுதுகொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது எனவும் கூறியுள்ளார்.

நாங்கள் சாப்பிடுவதற்கு ஒன்றாக உட்காருகிறபோது என் மனைவி, 'இந்த உணவு இறந்துபோன மகளுக்கு பிடித்தமான உணவு. அவள் இல்லாமல் இதை நாம் சாப்பிடுகிறோம்' என்கிறாள்.



அவளுக்கு நல்ல சாப்பாடு என்றால் மிகவும் பிடிக்கும். அவள் கடைசியாக வீட்டை விட்டு புறப்பட்டு வெளியே சென்றபோது, 3 அல்லது 4 மணி நேரத்தில் திரும்பி வருவேன் என கூறிச்சென்றாள்.

ஆனால் எங்கள் காத்திருப்புக்கு முடிவே இல்லை. மணிகள் நாட்களாகவும், நாட்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடமாகவும் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.