Header Ads

விஷாலின் ஜோடியாக தமன்னா



விஷாலுடன் முதன் முறையாக ஜோடி சேரப்போகிறாராம் தமன்னா.
இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தின் தோல்விக்குப் பின்னர் அவரின் படத்தில் நடிக்க பலரும் யோசித்து வந்த நிலையில் விஷால் நடித்து, தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகின.

விஷால் ஏற்கனவே பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்துள்ளார். அந்த நட்பின் அடையாளமாக இப்போது பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் பத்து நாட்களுக்கு முன்பு பாலாவை சந்தித்த விஷால், பாலா கூறிய இரண்டு வரி நகைச்சுவை கதையை கேட்டு ரொம்ப மகிழ்ச்சியடைந்து படத்தை தானே தயாரிப்பதாக கூறி ஒரு பெரிய தொகையை அட்வான்சாக கொடுத்துவிட்டாராம்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

No comments:

Powered by Blogger.