ஜனாதிபதி மஹிந்த வழங்கிய பரிசை, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தார் அப்போட்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பரிசுப் பொருளை, அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் அந்நாட்டு அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவுஸ்திரேலிய பிரதமருக்கு, இலங்கை ஜனாதிபதி நினைவுப் பரிசில்களை வழங்கியுள்ளார்.
சேர்ட் கைப் பகுதிகளில் பொருத்தக் கூடிய பெறுமதி வாய்ந்த பட்டன்கள் மற்றும் வெள்ளியிலான பெட்டியொன்று ஆகியன பிரதமர் அபோட்டிற்கு ஜனாதிபதி, வழங்கியுள்ளார்.
இந்த பட்டன்களில் பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்கள் பொருத்தப்பட்டிருந்தன.
பரிசுப் பொருளைப் பெற்றுக் கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர், குறித்த பரிசுப் பொருளை அந்நாட்டு அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்.
அவுஸ்திரேலிய சட்டத்தின் பிரகாரம் 750 டொலர்களுக்கு அதிகமான பரிசுப் பொருட்களை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
புருனையின் சுல்தான் வழங்கிய 12 செம்பயின் மற்றும் 12 ஷிவாஸ் வைன் போத்தல்களையும் அவுஸ்திரேலிய பிரதமர் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்.

No comments: