Header Ads

பா.ஜனதா கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க பா.ம.க. கடும் எதிர்ப்பு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க., ம.தி.மு.க. இடம் பெறுவது தொடர்பான பூர்வாங்க பேச்சுவாரத்தை நடந்து வருகிறது. இரு கட்சிகளும் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்த அணியில் தே.மு.தி.க வையும் சேர்த்தால் கூட்டணி வலுவாக இருக்கும் என்ற பா.ஜனதா நினைக்கிறது.

இந்த கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இது தொடர்பாக தே.மு.தி.க தலைமையுடனும் பேசி வருகிறார்.

இதற்கிடையே இந்த கூட்டணி தொடர்பாக பா.ஜனதா தலைவர்களும், பா.ம.க. தலைவர்களும் கடந்த வாரம் சந்தித்து பேசி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தேசிய செயலாளர் முரளிதரராவ், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வை சேர்ப்பதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றும் தே.மு.தி.க.வை சேர்ப்பதை விரும்பவில்லை என்றும் பா.ம.க. தரப்பில் தெரிவித்துள்ளனர்.

பா.ம.க.வுக்கு வட மாவட்டங்களில் செல்வாக்கு அதிகமாக உள்ளது. தே.மு.தி.க.வும் இந்த அணியில் இடம் பெற்றால் அரசியல் ரீதியாக பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று பா.ம.க. கருதுகிறது. எனவே, விஜயகந்தை சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலம் பா.ஜனதா கூட்டணி தொடர்பாக அடுத்த மாதம் (ஜனவரி) 2–ந்தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்வோம் என்றும் பா.ம.க. தரப்பில் தெரிவித்துள்ளனர்.

பா.ம.க.வின் எதிர்ப்பால் பா.ஜனதா தர்ம சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழருவி மணியன் கூறும்போது:–

தை பொங்கலுக்கு பிறகுதான் இந்த கூட்டணி முழுவடிவம் பெறும். கொங்கு மண்டலத்தில் உள்ள பல அமைப்புகள் பா.ஜனதாவுடன் இணைய ஆர்வமாக உள்ளன. விஜயகாந்துடனும் பேசி இருக்கிறேன். தை மாதம் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்பதாக கூறி இருக்கிறார் என்றார்.

No comments:

Powered by Blogger.