ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் நாட்டுக்கு எதிராக சதி
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சக்திகளின் தேவைகளுக்கு அமைய இவ்வாறு ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் சதித் திட்டமொன்றில் பங்கெடுத்துள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவி வகிக்கும் அமைச்சர் ஒருவரே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
நாட்டுக்கு எதிரான தகவல்களை சர்வதேச சக்திகளிடம் குறித்த அமைச்சர் வழங்கியுள்ளார்.
இந்த சதித் திட்டத்தின் சகல விடயங்களும் அம்பலமாகியுள்ளன.
இந்த விடயம் குறித்து முக்கிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அமைச்சரவையின் கூட்டு பொறுப்புக்களை உதாசீனம் செய்து, கடும்போக்குவாத வெளிநாட்டு சக்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கென்ய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியவுடன், குறித்த அமைச்சருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது

No comments: