துஷா கமலேஸ்வரனுக்கு கிறிஸ்மஸ் உபசரிப்பை வழங்கிய பிரித்தானியாவின் மிரர் பத்திரிகை
2011 ஆம் ஆண்டு தெற்கு லண்டன் பகுதியில் உள்ள தனது மாமாவின் கடையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கால்கள் செயலிழந்துள்ள துஷா கமலேஸ்வரன் என்ற சிறுமிக்கு பிரித்தானியாவின் மிரர் பத்திரிகை கிறிஸ்மஸ் உபசரிப்பை வழங்கியது.
துஷா கமலேஸ்வரன் லெப்லேண்டில் உள்ள கிறிஸ்மஸ் தாத்தாவை காண சென்றார். புன்னகை தவழும் இந்த சிறுமி மீண்டும் எழுந்து நடக்க வேண்டும் என கிறிஸ்மஸ் தாதா மிக விசேடமான வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
5 வயதில் குழுவொன்றின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இடையில் சிக்கி காயமடைந்த துஷாவுக்கு இடுப்பு பகுதிக்கு கீழ் உடல் செயலிழந்தது.
கிறிஸ்மஸ் தாதாவை அவரது பனி படர்ந்த தாய் நாட்டில் துஷா சந்தித்தார். இது எனது வாழ்க்கையில் மிகச் சிறந்த நாள் என துஷா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதற்கு முன்னர் நான் கிறிஸ்மஸ் தாதாவை பார்த்திருக்கின்றேன் ஆனால் இது உண்மையானது. சகல வருடங்களிலும் நான் எழுந்து நடப்பதற்கான கடுமையாகவும் சிறந்த முறையிலும் வேலை செய்து வருகிறேன்.
சகல கிறிஸ்மஸ் பண்டிகைகளிலும் இந்த கிறிஸ்மஸ் பண்டிகையே எனக்கு மிகவும் சிறந்ததாக இருக்கிறது என்றார்.
துஷாவுடன் அவரது 5 வயதான சகோதரி துஷிகாவையும் 14 வயதான சகோதரர் துஷானையும் லெப் லேண்டுக்கு பிரித்தானியாவின் மிரர் பத்திரிகையினர் அழைத்துச் சென்றனர்.
இவர்கள் வொண்டர் லேண்டில் பனிப் பந்து விளையாடினர். இதன் பின்னர் சென்டா பார்க்கிற்கு சென்றனர். அங்கு கிறிஸ்மஸ் தாத்தா தனது உண்மையான வண்டியுடன் இருந்தார்.
கிறிஸ்மஸ் தாத்தாவையும் அவரது வண்டி போன்றவற்றை கண்டு துஷா மிகவும் மகிழ்ச்சியடைந்தாக மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

No comments: