கல்யாண சமையல் சாதம் விமர்சனம்
ஒரு ஆச்சாரமான குடும்பத்து திருமணம், அதற்கான ஏற்பாடுகள் அப்புறம் மணமக்கள் தங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான சந்திப்புகள் என கல கல கல்யாண வைபோகம்தான் கல்யாண சமையல் சாதம். திருமணத்துக்கு கொஞ்சம் முன்னாள் பிரசன்னாவுக்கு ஒரு பிரச்சினை அதை சமாளித்து (காமெடியாக) பிரசன்னாவுக்கு பிரச்சினையே இல்லை என்று ஜாலியாக சொல்லி இருக்கிறார்கள்
ஃபேஸ்புக் ட்விட்டர் என லேட்டஸ்ட் சமாச்சாரங்களை உள்ளே நுழைத்திருப்பது எல்லாம் ஓகேதான் ஆனால் அவ்வளவு ஆச்சாரமான குடும்ப பெண்னும் பையனும் சரக்கடிப்பது போன்ற பல விசயங்கள் படத்தின் தன்மையையும், படத்தை பற்றிய எதிர்பார்ப்புடன் ரசிகர்ளுக்கு படத்தின் மேலிருந்த பிடிப்பையும் பாதிக்கிறது.
பிரசன்னா லேகா வாசிங்டன் இருவரும் நன்றாக இருக்கிறார்கள். உண்மையான மணமக்கள் போலவே நமக்கும் தோன்றுகிறார்கள். லேகாவாசிங்டன் அழகோ அழகு ஆனால் நடிப்புதான் கொஞ்சம் சிக்கல் போலிருக்கிறது. படத்தில் வரும் எல்லா கேரக்டரும் நன்றாக கதைக்கும் காட்சிகளுக்கும் பொருந்துகிறார்கள்.
இரண்டு பாடல்கள் மனதில் பதிகின்றன. வண்ணங்களை வாரி இறைத்திருக்கும் கேமிரா மேன் கிருண்ணன் வசந்த் இப்படத்தை பொருத்தவரை முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
இது போன்ற படங்கள் கண்டிப்பாக காமெடிப்படமாகத்தான் இருக்கும் இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல ஆனால் பல இடங்களில் வரும் காமெடிக்காட்சிகளில் தியேட்டர் அமைதியாக இருக்கிறது. ரசிகர்கள் என்ன எதிர்பாத்து போகிறார்களோ அதை பாதியளவு கூட பூர்த்தி செய்யவில்லை.
Verdict : கல்யாண சமையல் சாதம்: சற்றே உப்பு குறைவு
No comments: