Header Ads

ஓய்வூதியத்தில் சலுகைகள் கோரும் பாலியல் தொழிலாளர்கள்

நெதர்லாந்தை சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் தங்களுக்கு ஓய்வூதிய உரிமைகள் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நெதர்லாந்தில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் தங்கள் ஓய்வூதியத் திட்டங்களில் மாதத்திற்கு 5000 யூரோக்கள் வரை வருமான வரி விலக்குடன் போட்டு வைக்கலாம்.

இங்கு பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதால், பதிவு செய்து கொண்ட தொழிலாளர்கள் நிச்சயம் வரி கட்ட வேண்டும்.

இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, இருப்பினும் அது போதவில்லையாம்.

எனவே கால்பந்து வீரர்களை போன்று, தங்களுக்கும் சேமிக்க வரிவிலக்கு அளிக்க வேண்டும் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.