Header Ads

கடையில் சாமர்த்தியமாக திருடிய நாய் கைது - வீடியோ

அமெரிக்காவில் உள்ள ஒரு கடையில் திருடிய நாயை பிடித்த போலீசார் ஒரு சிறிய எச்சரிக்கைக்கு பின்னர் அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். 
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள கிளிண்டன் என்னும் பல்பொருள் அங்காடியில் வளர்ப்பு நாய் ஒன்று பொருட்களை திருடியது தெரியவந்துள்ளது.


கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவில், அந்த நாய், கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து கடைக்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அந்த நாயை கைது செய்து கூண்டில் அடைத்தனர்.

அதன் பின்னர் நாய் மீதான குற்றச்சாட்டுகளை வற்புறுத்தப்போவதில்லை என்று முடிவு செய்துள்ள கடையின் உரிமையாளர்கள் நாயின் உரிமையாளரிடமே அதனை ஒப்படைக்க அனுமதி அளித்தனர்.

No comments:

Powered by Blogger.