பரத்-நந்திதா இணையும் முழுநீள நகைச்சுவை படம்
நடிகர் பரத் தமிழில் கடைசியாக நடித்த படம் ‘ஐந்து ஐந்து ஐந்து’. இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தேடித்தரவில்லை. இருப்பினும், இப்படத்திற்காக இவர் வைத்த சிக்ஸ் பேக் உடற்கட்டு இவருக்கு இந்திப்பட வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. இவர் இந்தியில் நடித்த ‘ஜாக்பாட்’ படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழ் படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் பரத். இதுவரை ஆக்ஷன், செண்டிமென்ட் படங்களில் நடித்த பரத் முழுக்க காமெடி திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘அட்டக்கத்தி’ நந்திதா நடிக்கவுள்ளார்.
இதுகுறித்து பரத் கூறும்போது, இப்படம் நான் நடிக்கும் முதல் நகைச்சுவை படம். இந்த கதைக்களம் எனக்கு புதியது. இப்படத்தை பூபதி பாண்டியனிடம் அசோசியேட்டாக பணிபுரிந்த ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஜனவரி மாதம் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம் என்று கூறினார்.
இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. பரத் இதுதவிர, மலையாளத்தில் ‘கூத்தர’ என்ற படத்திலும், இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சத்யராஜூடன் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
No comments: