நான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் விளக்கமறியலில்
நான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மினுவங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் கம்பாஹா நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
34 வயதான இந்த சந்தேக நபர் நேற்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் மினுவங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி கம்பாஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments: