அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்! ஆகஸ்ட் 15-ல் மதுரையில் மகுடம் சூட்டுகிறார்களாம்!!
கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற பரபரப்பான சூழல் கோடம்பாக்கத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. ஒருசாரர் ரஜினி பீல்டில் இருக்கும்போதே அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு என்ன அவசியம் இருக்கிறது எனறு கருத்து சொல்லி வந்தாலும், அது யார் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை.
குறிப்பாக, விஜய்-அஜீத் ரசிகர்கள் இது சம்பந்தமாக அடிக்கடி இணையதளங்களில் மோதிக்கொண்டு வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே விஜய்யின் தலைவா படத்தின் ஆடியோ விழாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அப்படத்தின் டைரக்டர் ஏ.எல்.விஜய் மேடையில் அறிவித்தார். இதற்கு அஜீத் ரசிகர்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தது.
என்றாலும், சமீபத்தில் ஒரு வார பத்திரிகை தாங்கள் நடத்திய சூப்பர் ஸ்டார் கருத்துக்கணிப்பில் விஜய்க்கே அதிக வாக்குகள் கிடைத்ததாக சொல்லி அவரே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அறிவித்து பரபரப்பு கூட்டியது. ஆனால், அதையடுத்து ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய், சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நான் ஆசைப்படவில்லை. இளையதளபதியே போதும் என்று பேசினார்.
இந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 15-ந்தேதி மதுரையில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கும விழா நடைபெற இருப்பதாக பரபரப்பு செய்திகள் நேற்று வெளியாகியுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனபோதும், இந்த செய்தி குறித்து விஜய்தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
No comments: