கணவனை புறக்கணித்து வாலிபர்களுடன் உல்லாசம் : மருமகளை உயிருடன் தீவைத்து கொளுத்திய மாமனார்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டை சாது தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 28). இவரது மனைவி சத்யா (22). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஏழுமலை சென்னையில் தங்கி அங்குள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சத்யா தனது குழந்தைகளுடன் மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார்.
இதற்கிடையில் சரண்யா அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஏழுமலை மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். மேலும் சத்யாவை கண்டித்தார். ஆனால் இதனையும் மீறி அந்த வாலிபர்களுடன் சத்யா பழகி உல்லாசமாக இருந்தௌ வந்ததால் ஏழுமலை வீட்டுக்கு வராமல் சென்னையில் நிரந்தரமாக தங்கிவிட்டார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சத்யா அந்த வாலிபர்களை வீட்டுக்கே அழைத்து பழகி வந்தார். சம்பவத்தன்று இரவு அதுபோல் சத்யா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் வீட்டில்இருந்தார். அப்போது இதனை பார்த்து சத்யாவின் மாமனார் அரசன் கண்டித்தார். இதனால் சத்யாவுக்கும், அரசனுக்கும் இடையில் வாய் தகராறு ஏற்ட்டது. பல முறை கண்டித்தும் சத்யா கேட்காததால் ஆத்திரம் அடைந்த அரசன் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து சத்யாவின் உடலில் ஊற்றி தீவைத்துவிட்டு ஓடிவிட்டார்.
இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில் கிடந்த சத்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், அதன் பிறகு சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்யா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து எலவனாசூர் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி கொலை வழக்காக பதிவு செய்து அரசனை கைது
No comments: