மீண்டும் சூர்யா படம் இயக்க சிங்கம்புலி ஆர்வம்!
அஜீத் நடித்த ரெட், சூர்யா நடித்த மாயாவி படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. அதற்கு பிறகு படம் இயக்காமல் காமெடி நடிகராக மாறி நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க முயற்சித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: பல வருடம் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தேன். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் வேறு வேலைக்குச் சென்று விட்டேன். இயக்குனர் பாலாதான் சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம், வா என்று அழைத்துச் சேர்த்துக் கொண்டார். அவர் படங்களின் காமெடி ஏரியாவை பார்த்துக் கொண்டேன். பிறகு அவர் தயாரித்த படத்தை இயக்கினேன். இப்போது காமெடி நடிகனாகிவிட்டேன். சமீபத்தில் நான் சோலோ காமெடியனாக நடித்த பப்பாளியில் எனது நடிப்பை பார்த்துவிட்ட எல்லோரும் பாராட்டுகிறார்கள்.
இனி எந்த காமெடி நடிகர் வந்தாலும் சரி, இப்போது நடித்துக் கொண்டிருப்பவர்களாலும் சரி வடிவேலுவின் பாதிப்பு இல்லாமல் நடிக்க முடியாது. அவர் காமெடியை யாராலும் அடிச்சுக்க முடியாது. நீதிபதி, அரசியல் வாதிகள் முதல் ரிக்ஷாக்காரன் வரை அவரது காமெடியால்தான் ரிலாக்ஸ் ஆகிறார்கள். மீண்டும் படம் இயக்க இருக்கிறேன்.
சமீபத்தில் சூர்யாவை சந்தித்து பூர்வஜென்ம கதை ஒன்றை கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். "சேர்ந்து வேலை செய்யலாம் சிங்கம்" என்று சொல்லியிருக்கிறார். அவரின் பதிலுக்காக காத்திருக்கிறேன். என்கிறார் சிங்கம்புலி.
No comments: