கள்ளக்காதலனுடன் உல்லாசம்: ஆபாச படம் வெளியானதால் பெண் தீக்குளித்து தற்கொலை
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாச படம் செல்போனில் பரவியதால் அவமானம் அடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
செல்போனில் ஆபாச படம்
சிதம்பரம் அருகே வடக்கு தில்லைநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் மனைவி செல்வராணி (வயது 28). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்–மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் கணவரிடம் இருந்து பிரிந்து செல்வராணி அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், செல்வராணிக்கும், அதே ஊரை சேர்ந்த மற்றொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் செல்வராணி தனது கள்ளக்காதலன் வீட்டுக்கு சென்று அவருடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அதே ஊரை சேர்ந்த ஒருவர் செல்வாரணியும், கள்ளக்காதலனும் நெருக்கமாக இருப்பதை மறைந்திருந்து செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர், ஆபாச படத்தை அந்த நபர் புளூடுத் மூலம் அப்பகுதியில் உள்ள மற்ற இளைஞர்களின் செல்போனுக்கு அனுப்பி இருக்கிறார்.
இதையறிந்த செல்வராணி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை உறவினர்கள் மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் செல்வாரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராணியின் ஆபாச படத்தை போலீசார் சேகரித்து அதிலுள்ள கள்ளக்காதலன் மற்றும் ஆபாச படம் பிடித்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments: