அஜித், விஜய்யை முந்தும் தனுஷ்
தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித், விஜய் தான். இவர்கள் படம் வெளியானால் படத்தின் வசூலை ஒரே வாரத்தில் அள்ளிவிடலாம் என்பது தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களின் கணிப்பு.கடந்த சில வருடங்களாக வெற்றிகளே கொடுக்காத தனுஷிற்கு உடனடியாக ஒரு வெற்றி தேவைப்பட்டது, அது வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் சமீபத்தில் நிறைவேறியது.ஆனால், இது சாதாரணமான வெற்றி இல்லை அஜித், விஜய் படங்களின் ஓப்பனிங்கிற்கு நிகராக வசூல் வந்துள்ளதாகவும், மேலும் இன்னும் சில நாட்களில் இந்த வருடத்தில் வந்த அனைத்து திரைப்படங்களின் வசூலையும் இது முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: