பைக்' வாங்க மனைவியை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்ற கணவர்
மத்திய பிரதேச மாநிலம் பிதூல் பகுதியில் வாலிபர் ஒருவர் 'பைக்' வாங்குவதற்காக தனது மனைவியை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்றுள்ளார்.
பிதூல் நகரில் கணவருடன் வசித்த தனது மகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்துள்ளனர். அப்போது 'பைக்' வாங்குவதற்காக பெண்ணை ரூ. 50 ஆயிரத்திற்கு அவரது கணவரே விற்ற கொடூர சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. தனது மனைவிக்கு வேலை கிடைத்துள்ளது என்று கூறி அந்த வாலிபர் அவரை கடந்த 4ம் தேதி போபாலுக்கு அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியிலே தனது சகோதரனின் வீட்டில் தனது குழந்தையை விட்டுவிட்டு சென்றுள்ளான். பின்னர் ராஜ்காருக்கு மனைவியை மட்டும் அழைத்து சென்று அங்குள்ள புரோக்கரிடம் பெண்ணை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்றுவிட்டு அவருக்கு தெரியாமல் ஓடி வந்துள்ளான்.
பின்னர் புரோக்கர் அரவிந்த் அந்த பெண்ணை திலீப் என்பவருக்கு விற்றுள்ளான். அவன், அவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளான். போலீசார் விசாரித்து பெண்ணை அங்கு இருந்து மீட்டு அவரது தந்தையிடம் ஒப்படைத்தார். மேலும், பெண்ணை கடத்தியது தொடர்பாக 3 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments: