இனி, பிரேம்ஜி அமரன் தான் யங் சூப்பர் ஸ்டாராம்!
வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும. புதுமையாக பர்பாமென்ஸ் செய்ய வேண்டும். உலகத்தரத்துக்கு தமிழ் சினிமாவை மாற்ற வேண்டும் என்றெல்லாம் நம்ம ஊர் நடிகர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ, ரெண்டு படம் ஓடியதும் தங்களது பெயருக்கு முன்னால் புரட்சிகரமான பட்டப்பெயரை சூட்டிக்கொள்வதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதனால்தான் தற்போது கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டை அஜீத், விஜய் வட்டாரத்தில் உச்சத்தை எட்டியிருப்பதால், யங் சூப்பர் ஸ்டார் என்று தனக்குத்தானே பட்டப்பெயரை சூட்டிக்கொண்டு வந்த சிம்பு, சமீபத்தில் அந்த பட்டம் தனக்கு சுமையாக இருப்பதாக அறிவித்தார். மேலும், இனி மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துவதில் மட்டுமே எனது கவனம் இருக்கும் என்று தெரிவித்து யங் சூப்பர் ஸ்டார் பட்டம் இனி எனக்கு வேண்டாம் என்று செய்தி வெளியிட்டார்.
ஆனால், அவர் சுமையாக இருக்கிறது என்று கூறி இறக்கி வைத்த அந்த யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை இப்போது தனது அண்ணன் வெங்கட்பிரபு படங்களில் அழிச்சாட்டியம் செய்து வரும் பிரேம்ஜி, சிம்பு இறக்கி வைத்த யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நான் இனி சூட்டிக்கொள்ளப்போகிறேன் என்று டுவிட் செய்துள்ளார். அதோடு, சிம்புவே என் தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments: