கள்ளக்காதலனுடன் மனைவியை நேரில் பார்த்த கணவர் அதிர்ச்சியில் மயக்கம்
திருவட்டார் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கலைக்குழுவினருடன் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இவருக்கு 40 வயதில் மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உண்டு. கணவர் அடிக்கடி வெளியூர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்த செல்வது உண்டு. அப்போது, மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று இரவு கணவர் திடீரென வீட்டுக்கு வந்தார். அப்போது, படுக்கை அறையில் இருவர் பேசிக்கொண்ட சத்தம் கேட்டது. உடனே, நைசாக கணவர் படுக்கை அறையில் சென்ற போது, தனது மனைவி வாலிபருடன் இருப்பதை கண்டார். மனைவியின் கள்ளக்காதலை நேரில் பார்த்த கணவர் அதிர்ச்சியில் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கள்ளக்காதலன் தப்பி ஓடினார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த கணவர் மனைவியை பயங்கர மாக துரத்தி துரத்தி அடித்தார். இதுகுறித்து அக்கம் பக்கத் தினர் திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அறிவுரை கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
No comments: