சந்தானத்தை வீழ்த்துகிறார் சூரி!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு சந்தானத்தின் நட்பு வட்டார நடிகர்களே அவரை கழட்டி விட்டு வருகின்றனர். அதனால் அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. மாறாக, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சூரியின் மார்க்கெட் எகிறி விட்டது.
தற்போதைய நிலவரப்படி, லிங்கா, அரண்மனை, ஐ, நண்பேன்டா என சில மெகா படங்களில் மட்டுமே சந்தானம் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், அவரது சம்பளமும் தற்போது ஏறுமுகத்தில் சென்று கொண்டிருப்பதுதான். நான் ஹீரோவாகி விட்டேன் அதனால் பழைய ஞாபகத்தில் என்னிடம் வராதீர்கள் என்று அவர் எக்குத்தப்பாக பேசுவதால், பட்ஜெட் தாங்காது என்று அவரது அபிமான டைரக்டர்களே சூரியை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். இதனால் சந்தானத்துக்கு வர வேண்டிய படங்களெல்லாமே இப்போது சூரிக்கு பின்னால்தான் அணிவகுத்து நிற்கின்றன.
இந்த நிலையில், சந்தானத்தை வீழ்த்த இதுதான் சரியான தருணம் என்று நினைக்கும் சூரி, சந்தானம் தான் நடித்த எந்த படத்தின் ஆடியோ விழாக்களுக்கும் செல்லாத நிலையில், இவரோ, தான் அவுட்டோர்களில் இருந்தாலும் ஆடியோ விழாக்களில் அவசியம் ஆஜராகி விடுகிறார். அதோடு, அதற்கான போக்குவரத்து செலவை கூட தயாரிப்பாளர்களிடத்தில் கேட்பதில்லை. சொந்த செலவிலேயே வந்து செல்கிறார் சூரி. ஆக படஅதிபர்கள் ம்த்தியில் சூரியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
No comments: